Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

20ஏக்கர், 60,000 சதுர அடி…. ரூ30,00,00,000 செலவில்… சாய்பாபா கோவில்…. கும்பாபிஷேகத்திற்கு திருச்சியில் குவிந்த பக்தர்கள்…!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம்  சமயபுரம் அருகே கடந்த 3 ஆண்டுகளாக சீரடியில் உள்ளது போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக் கலையுடன் 20 ஏக்கர் பரப்பளவில் 60,000 சதுர அடியில் 30 கோடி ரூபாய் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து கும்பாபிஷேகம் விழா கடந்த 17ம் தேதி தொடங்கி காவிரி ஆற்றிலிருந்து 1,008 குடங்களில் எடுத்து வரப்பட்ட தண்ணீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்த தண்ணீர் அனைத்து மரங்களுக்கும் புனித நீராக ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |