Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில்” 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு….. சனிக்கிழமை விடுமுறை…. வெளியாகுமா குட் நியூஸ்….!!!!

அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ராஜம், ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் நாகேந்திரன், சங்கர், வேல்முருகன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ஜெயபாரதி, ராஜேஷ், சூரியமூர்த்தி, நல்லமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை அளிக்க வேண்டும். அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணியாளர்களை மாற்ற வேண்டும். இதற்காக வட்டாரங்களில் முகாம் அமைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கான ஆணையை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதற்கான உரிய நடவடிக்கையை மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |