பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் என மின்வாரியத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் இன்று மின்தடை ஏற்படும் என மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. இந்த மின்தடை காலை 9 மணி முதல் 2 மணி வரை நீடிக்கும். மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
சென்னை தாம்பரம்: கடப்பேரி ஆர்.பி ரோடு பகுதி, வேல்முருகன் தெரு, சரஸ்வதி நகர், ஈ.டி.எல் காமகோடி தெரு, ஏ.ஜி.எஸ் காலணி, வி.ஜி.பி காந்தி நகர், சார்ச் அவென்யூ, காந்தி தெரு
சென்னை அடையாறு, காந்தி நகர் பகுதிகள்: காமராஜ் அவென்யூ 1 மற்றும் 2-ம் தெரு, கே.பி நகர் 4, 7, 8-வது மெயின் ரோடு, இந்திரா நகர் 7 முதல் 15 வரை உள்ள குறுக்கு தெரு
கிண்டி: மடிப்பாக்கம், மடுவான்கரை, ஆண்டாள் நகர், இந்திரா நகர், திலகர் அவென்யூ
போரூர்: பூந்தமல்லி ஜெ.ஜெ நகர், லீலாவதி நகர் ஆவடி மெயின் ரோடு, காவனூர் பொன்னியம்மன் நகர், சின்ன தெரு, நடைபாதை தெரு, சேக்கிழார் காலனி, ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், காரம்பாக்கம், மேத்தா நகர், ஆர்.இ நகர், ஆற்காடு ரோடு ஒரு பகுதி, கெருகம்பாக்கம், சுலோச்சனா நகர், பூமாதேவி நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு, மணப்பாக்கம் ஆர்.இ நகர், கிருஷ்ணா நகர், சித்தார்த் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி
செம்பியம் பகுதி: தணிகாசலம் நகர் சுந்தரமூர்த்தி தெரு, எத்திராஜ் தெரு, செல்வம் நகர், காமராஜர் சாலை, மூலக்கடை சந்திப்பு, ஜம்புலி தெரு, நேதாஜி நகர், மணலி நெடுஞ்சாலை ரோடு, அம்பிகா நகர், லட்சுமி அம்மன் கோவில் தெரு, பார்வதி நகர், செந்தில் நகர்
தண்டையார்பேட்டை மற்றும் காலடிப்பேட்டை: டி.எச் ரோடு பகுதி, ராஜாக் கடை, எல்லையம்மன் கோயில் தெரு, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திலகர் நகர், பி. கே.எம் காலனி
இந்த மின்தடை ஏற்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.