மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக அதிகரிக்கபடுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 30 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் அகவிலைப்படி 3% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப் பட்டிருக்கிறது.
இதன் மூலம் சுமார் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் பெண்சனர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு மத்திய அரசுக்கு கூடுதலாக 9,544.50 கோடி ரூபாய் செலவாகிறது. அகவிலைப்படி என்பது பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகை. இதன் மூலமாக அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கிறது.
மேலும் ஆண்டிற்கு ஜனவரி மற்றும் ஜூலை என இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி என்பது அடிப்படை சம்பளத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஒரு ஜூனியர் மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் 10,000 ரூபாய் என வைத்துக்கொண்டால் அதில் முந்தைய அகவிலைப்படி 31 சதவீதம் என்றால்5,580 ரூபாய்.
இப்போது அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இனி அதே அரசு ஊழியருக்கு அகவிலைப்படி 6120 ரூபாய் கிடைக்கும். அதாவது, அவருக்கு அகவிலைப்படி 540 ரூபாய் உயர்ந்துள்ளது.