Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் உறவை பறிகொடுத்தவரா?…. நிவாரணம் பெற…. உடனே இத பண்ணுங்க….!!!!

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா  என்ற பெரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் இந்த மனுவானது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை, 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழக்கு எண். I.A. No. 40111 / 2022 in M. A. No. 1805 / 2021 in W.P No.539 / 2021, நாள் 20.03.2022-ல் வழங்கிய தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  • மார்ச் 20ஆம் தேதிக்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (மே 18ஆம் தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் 20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
  • மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனுவினை  சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது பற்றி மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
  • இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேலே குறிப்பிட்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு சமர்ப்பித்து, நிவாரணத்தை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |