ஃபிக்ஸட் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதங்களை ஐசிஐசிஐ வங்கி உயர்த்தியுள்ளது.
முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை உயர்த்தியிருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் இரண்டு கோடி ரூபாய் வரை ஐந்து கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு குறைந்த பட்சமாக 2.50 சதவிகித வட்டியும்,அதிகபட்சமாக 4.65 சதவீத வட்டியும் ஐசிஐசி பேங்க் வழங்குகிறது. மேலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் புதிய வட்டி விகிதம் பொது வாடிக்கையாளர்களுக்கும் சீரியஸ் தங்களுக்கும் ஒன்றுதான் அதனால் மற்றவர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் கிடைக்காது.
புதிய வட்டி:
7 – 14 நாட்கள் : 2.50%
15 – 29 நாட்கள் : 2.50%
30 – 45 நாட்கள் ; 2.75%
46 – 60 நாட்கள் : 2.75%
61 – 90 நாட்கள் : 3%
91 – 120 நாட்கள் : 3.35%
121 – 150 நாட்கள் : 3.35%
185 – 210 நாட்கள் : 3.60%
211 – 270 நாட்கள் : 3.60%
271 – 289 நாட்கள் : 3.70%
290 – 364 நாட்கள் : 3.70%
1 ஆண்டு – 389 நாட்கள் : 4.20%
390 நாட்கள் – 15 மாதம் : 4.20%
15 மாதம் – 18 மாதம் : 4.25%
18 மாதம் – 2 ஆண்டுகள் : 4.35%
2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டுகள் : 4.55%
3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டுகள் : 4.65%
5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டுகள் : 4.65%