பீகாரில் பெருகி வரும் விஷ சாராயம் விற்பனைக்கு எதிராக முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளதாவது, மது அருந்துபவர்கள் மகா பாவிகள் என்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டியது அரசுக்கு கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு பீகாரில் மதுவிலக்கை திறம்பட அமல்படுத்தாததால், அம்மாநிலத்தில் மது நெருக்கடி நீடிப்பதாகவும், இதனால் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கியுள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்துள்ளார். இதையடுத்து மகாத்மா காந்தி கூட மதுவுக்கு எதிரானவர் என்றும், அவரது கொள்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் பெரும் பாவிகள் என்றும் நிதிஷ் கூறியுள்ளார். இதனால் குடிகாரர்களை இந்தியர்களாகக் கருதவில்லை என்றும்
மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு என்று தெரிந்தும் மக்கள் மது அருந்துவதாகவும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு .மேலும் அதற்கு மாநில அரசு பொறுப்பு அல்ல. இந்நிலையில் 2021ஆம் ஆண்டின் கடந்த 6 மாதங்களில் பீகாரில் கள்ளச்சந்தையில் மது அருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.