பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவருக்கு தற்போது உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது கவினுடன் ஏற்பட்ட காதலினால் சர்ச்சையில் சிக்கினார். ஆனாலும் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் வரை சென்றார்.
இதனையடுத்து தற்போது 2 தமிழ் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய முதல் காதல் அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது முதல் காதல் ஏற்பட்டதாகவும், ஆனால் அது ஒருதலைக்காதல் தான் எனவும், அந்த பையனுக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டதாகவும் கூறினார். மேலும் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபோது அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும் அதுதான் முதல் முத்தம் என்றும் பகிர்ந்துள்ளார்.