திமுக ஆட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது குடும்பத்தினர் தலையிடுவதை சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுகவோ, அதிமுகவோ எந்த ஆட்சியாக இருந்தாலும் உள்ளாட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது கணவரும், குடும்பத்தினரும் ஈடுபடும் வகையில் பல வருடங்களாக இருந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆட்சியினர் பல இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெண் கவுன்சிலர்கள் செயல் பாடுகள் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் எழுந்து உள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “திமுகவில் ஆட்சியில் காவல் துறை, அரசு அதிகாரிகளால், உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு, தாக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் திமுக கவுன்சிலர்கள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினர்கள் அராஜகமும், ஆதிக்கமும், அட்டகாசமும், அடக்குமுறையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் வியாபாரிகளும், வீட்டு உரிமையாளர்களும் திமுகவினரின் வசூல் வேட்டை பார்த்து அச்சம் அடைந்துள்ளனர். திமுகவின் இந்த செயலுக்கு அஇ அதிமுகவின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறேன். இதனை தொடர்ந்து முதல்வர் இத்தகைய விஷயத்தில் தலையிட்டு உடனடியாக சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.