நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் மூன்று மாதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.