Categories
உலக செய்திகள்

OMG….!! வரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு வெப்பநிலை…. உருகும் பணியால் அழிவு பாதையில் உலகம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அண்டார்டிகாவில் கடுமையான வெப்ப மண்டலம் காரணமாக ராட்சத அளவிலான பனிப்பாறை உருகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்டார்டிக்காவில் கிழக்கே கடுமையான வெப்பநிலை காரணமாக முதன்முறையாக 1,200 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட ‘காங்கர் பனி அடுக்கு’ என்னும் ராட்சத அளவிலான பனிப்பாறை உருகி சரிந்துள்ளது. இந்த  பனிப்பாறையின் அளவு ரோம் நகரத்தின் பரப்பளவுக்கு சமமானது. இந்த நிலையில் நன்னீரால் ஆனா  அண்டார்டிகாவில் பனி அடுக்குகள் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த நிகழ்வு மிக முக்கியமானது.

இது தொடர்பாக நாசா விஞ்ஞானி கேத்தரின் கொல்லோ வாக்கர்,  சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வளிமண்டல பாதிப்பு வெப்ப அலையால் அண்டார்டிகாவில் பனி முகடுகள் தாக்கக்கூடும். மேலும் கடலில் பனிக்கட்டிகள் உருகி சிறு வெள்ளை துண்டுகளாக பரவிக் கிடக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து பனிக்கட்டிகள் என்பது நிரந்தரமான மிதக்கும் பனி தகடுகள் போன்றவை. இவைகள் அளியும் போது பனிக்கட்டிகள் உருகி கடலில் சேர்ந்து அதன் உயரம் அதிகமாகும். இதற்கிடையில் மினசோட்டா பல்கலையின் பனிப்பாறை நிபுணர் பீட்டர் நெப்  அண்டார்டிகாவில் கிழக்கே சில பகுதிகளில் மார்ச் மாதத்தில் இயல்பை விட 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியதாக கூறியுள்ளார். இந்நிலையில் காலநிலை மாற்றம் புவியின் எப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இதனை தடுக்காவிட்டால் அண்டார்டிகா மட்டுமின்றி ஒட்டுமொத்த பூமிக்கு ஆபத்தாகி விடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |