சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) இந்தியாவில் கொரோனா காலகட்டத்திலும் சாதனை அளவில் அந்நிய நேரடி முதலீடு நடந்ததாக கூறியிருக்கிறது.
இதுபற்றி சா்வதேச நிதியத்தின் இணை நிா்வாக இயக்குநரான கீதா கோபிநாத் தெரிவித்திருப்பதாவது, கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த சமயத்திலும், இந்தியா மிகவும் அதிகமாக அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொண்டு சாதனை செய்திருக்கிறது.
மேலும், இந்தியா, அந்நிய முதலீட்டினால் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகளையும் மேற்கொள்வது கவனிக்கக் கூடியது. அந்நிய மூலதனதத்தினால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் முதலீடு செய்வதனால் பல நன்மைகள் நாடுகளுக்கு கிடைத்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.