உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் போர் உள்ளிட்ட மோதல்கள் நடக்கும் இடத்தில் வசிப்பதாக ஐநா நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ் உக்ரைன், ஏமன், சிரியா, மியான்மர், ஹெய்தி போன்ற நாடுகளில் நடக்கும் போர் குறித்து பேசியுள்ளார், அவர் பேசுகையில், “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மோதல்கள் நடக்கும் இடங்களில் அதிக அளவிலான மக்கள் வசிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக கடந்த வருடம் மட்டும் 8 கோடியை 40 லட்சம் பேர் அகதிகள் ஆகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி உக்ரைன் போரால் 40 லட்சம் பேர் வெளிநாடுகளிலும், 65 லட்சம் பேர் உள் நாடுகளிலும் அகத்திகள் ஆகியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு பேர் சூழலில் பாதிக்கப்பட்டு மனிதாபிமான உதவிகளை தேவைப்படுபவர்களாக 27 கோடி இருகிறார்கள் என்றும் இது கடந்த ஆண்டை விட 17% அதிகம். இதற்கிடையில் உலகமெங்கும் போர், வன்முறை, மோதல்கள் போன்றவை மேலும் அதிகரிப்பதற்கான சூழலே தற்போது நிலவி வருகிறது. எனவே இந்த சம்பவத்திற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்வது அவசியம்” என்று கூறியுள்ளார்.