Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் தந்த பரிசு…. என்ன தெரியுமா….? வைரலாகும் புகைப்படம்…..!!!!

காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகை நயன்தாரா சமந்தாவிற்கு ஒரு அன்பு பரிசை கொடுத்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் காத்துவாக்குல இரண்டு காதல். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் சேர்ந்து ரவுடி பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாராவுக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். தங்கம் மற்றும் வைரத்தால் ஆன கம்மல் ஒன்றை அவர் பரிசளித்துள்ளார்.  இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |