பள்ளத்தில் சிக்கி லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வடக்கன்குளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ஒரு லாரி மணல் ஏற்றிக் கொண்டு சென்றது. அந்த லாரி அப்டா மார்க்கெட் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது நான்கு வழிச்சாலையில் பணி முழுமை அடையாமல் இருந்தது. இதை ஓட்டுநர் கவனிக்காமல் சென்றதால் லாரி பள்ளத்தில் இறங்கியது. இதனால் லாரியின் டயர்கள் உடைந்தது. இந்த விபத்தில் ஓட்டுநருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதன்பிறகு வேறு ஒரு லாரி வரவழைக்கப்பட்டு அந்த லாரியில் மணல் மாற்றப்பட்டது.