Categories
மாநில செய்திகள்

BREAKING : விருதுநகர் பாலியல் வன்கொடுமை….. 4 சிறார்களிடம் விசாரணை…!!

விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 சிறார்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர்கள் உட்பட  8 பேர் கைதானார்கள். இதையடுத்து சிறார்கள் கூர் நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்… இதில் முதல் கட்டமாக ஹரிகரன், பிரவீன் குமார், மாடசாமி, ஜுனைத் அகமது உள்ளிட்ட 4 பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது..

இந்நிலையில் மதுரையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வைத்து மாணவர்கள் 4 பேரிடமும் சிபிசிஐடி விசாரணை தொடங்கி இருக்கிறது. சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையில் குழு விசாரணை நடத்தி வருகிறது. விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய ஹரிகரன், பிரவீன் குமார், மாடசாமி, ஜுனைத் அகமது உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி காவல்துறை கடந்த 26ஆம் தேதி முதல் 6 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது..

இந்த சூழலில் தான் தற்போது மதுரையில் இருக்கக்கூடிய கூர்நோக்கு இல்லத்தில் மாணவர்கள் 4 பேரிடம் சிபிசிஐடி காவல்துறை விசாரணை தொடங்கி இருக்கிறது.

 

Categories

Tech |