Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேல்நிலைப் படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி படிப்பது குறித்தும், எந்த படிப்பை தேர்தெடுப்பதன் மூலம் வேலை வாய்ப்பு  கிடைக்கும் என்பது குறித்தும் வழிகாட்டுவதற்காக பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உயர்கல்வி ஆலோசனை மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு ஒன்று முதல் 4 முதுநிலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள். எனவே உயர்கல்வி, வேலைவாய்ப்பு, ஆலோசனை குறித்து அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது, இந்த பயிற்சியை படிப்பவர்கள் அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு வரும் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை பயிற்சி அளிக்க உள்ளனர், இதன் பின்னர் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பொதுத்தேர்வுக்கு முன்னரும் பின்னரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி ஆலோசனைகளை வழங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |