Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓடும் காரில் திடீர் தீ” அதிர்ஷ்டவசமாக தப்பிய டிரைவர்…. பெரும் பரபரப்பு….!!

திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜமங்கலம் அருகே ஸ்ரீகிருஷ்ணாபுரம் பகுதியில் தினேஷ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொந்த காரில் ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளார். இவர் கணபதிபுரம் அருகே சென்ற போது காரின் ஏ.சியில்  இருந்து திடீரென புகை மூட்டம் வந்துள்ளது. உடனே தினேஷ் ராம் ஏ.சியை அணைத்துள்ளார்.

அதற்குள் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் ராம் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கி வெளியே வந்துள்ளார். இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார்  முற்றிலுமாக எரிந்து நாசமானது.

Categories

Tech |