சார்ஜாவில் படிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுமி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
சார்ஜா அமீரகத்தில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரிதனி காதம்பரி என்ற சிறுமி படித்து வருகிறார். இந்த சிறுமியின் திறமையை பார்த்து பள்ளிக்கூட ஆசிரியர்கள் வியந்தனர். இந்நிலையில் ரிதனி காதம்பரி தனியாக ஒரு பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து 5 வயதுடைய சிறுமி காதம்பரி தனது மழலை மொழியில் பேசி லிட்டில் எக்ஸ்போ அம்பாசிடர் என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உலோகங்கள் மின் கழிவு, பிளாஸ்டிக் மறுசுழற்சி முறையை பழக்கப்படுத்தி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் நிலைத்தன்மை தலைவர் என்ற பட்டத்தையும் சிறுமி பெற்றுள்ளார். இவரது தாய் பிரபல ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான ஸ்ரீ ரோகிணி 5 வயதில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.