முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, கர்நாடக மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் அடிப்படையில் பொழுது விடிந்தால் தாசில்தாரை சந்தித்து கடிதம் கொடுப்பது, கடைகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்குகிறார்கள். இதன் காரணமாக சமுதாயத்தில் பெரிய சம்பவம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனிடையில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள அமைப்பினர் சமூக விரோதிகள் ஆவர்.
இவர்களுக்கு விவசாயிகளின் வாழ்க்கை குறித்து தெரியுமா..?. நம் விவசாயிகள் ஆடு வெட்டினாலும் அதனை சுத்தம் செய்ய முஸ்லிம் சமூகத்தினர் வருகிறார்கள். ஆனால் தற்போது ஹலால் இறைச்சியை வாங்காதீர்கள் என்று சொல்கிறார்கள். தற்போது கர்நாடகத்தில் மதரீதியிலான விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஆகவே முதல்-மந்திரியான பசவராஜ்பொம்மை ஆண் மகனாக இருந்தால் இந்தமத விவகாரங்களில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றுதெரிவித்தார்.