Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

களைகட்டிய பருத்தி ஏலம்…. 1 கோடியே 47 லட்சம் வரை விற்பனை…. போட்டிபோட்டு வாங்கிய வியாபாரிகள்….!!

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 47 லட்சம் வரை விற்பனை நடைபெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வழக்கம் போல பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 4,200 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், அவிநாசி, சேலம், தேனி, கொங்கணாபுரம், திண்டுக்கல் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 10,999 ரூபாய்க்கும், அதிக பட்ச விலையாக 13,219 ரூபாய்க்கும், ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 9,869 ரூபாயில் இருந்து 12,700 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி 5,469 ரூபாயில் இருந்து 8,700 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. அதன் அடிப்படையில் மொத்தம் 1 கோடியே 40 லட்சத்திற்கு பருத்தி விற்பனையாகியுள்ளது.

இதேபோல் திருச்செங்கோடு வேளாண்மை விற்பனையாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 11,656 ரூபாயில் இருந்து 12,256 ரூபாய்க்கும், பி.டி. ரக பருத்தி 10,450 ரூபாயில் இருந்து 12,620 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 7 லட்சத்து 50 ஆயிரம் வரை பருத்தி விற்பனையானது.

Categories

Tech |