Categories
தேசிய செய்திகள்

டூவீலர், கார் விலை… நாடாளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்… புதிய பரபரப்பு…!!!!

மின்சார வாகனங்களின் விலை பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இன்றைய நவீன உலகில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் தனிமனித அந்தஸ்து அடையாளமாக கருதப்படும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் மற்றும் மாற்று எரிசக்தி போன்றவற்றை கருத்தில் கொண்டு தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவித்து கொண்டிருக்கிறது. இந்த வாகனங்களின் விற்பனை சந்தையில் நாள்தோறும் உயர்ந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் மின்சார வாகனங்களின் விலை பற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி நாடாளுமன்ற மக்களவை முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

அதில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டில் அனைத்து மின்சார வாகனங்களின்  விலைகளும் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் சார்ஜில் ஸ்டேஷனை நிறுவினால், எம்பிக்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பிரச்சினைகள் சந்தித்து வருகிறோம். அதனால் கிரீன் ஹைட்ரஜன், மின்சாரம், எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ-எல்என்ஜி போன்ற மாற்று எரிப்பொருட்களுக்கு நாம் மாற வேண்டிய சரியான தருணம் இதுதான் என நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Categories

Tech |