சுங்கக்கட்டணம் அதிகரிப்பு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுதும் 400க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வானகரம் சுங்கச்சாவடி உள்பட 27 சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது வாகன வகைகளை பொறுத்து ரூபாய் 5 முதல் ரூபாய் 80 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதி வரையிலும் நடைமுறையில் இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை அதிகரித்து சுங்கச்சாவடி கட்டணமும் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையானது அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு சுங்க கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் சரக்கு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.