சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த இயந்திர நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் மீண்டும் தோற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட இயந்திர நாய் வீதிகளில் வலம் வருகிறது.
இந்த இயந்திர நாயின் மீது பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கி வழியாக தொடர்ந்து முக கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பினால் கழுவ வேண்டும், கொரோனா விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என வீதிகள் தோறும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஷாங்காய் நகரில் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தவும் சீன அரசு திட்டமிட்டுள்ளது.