Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பிள்ளையில்… மாரியம்மன் கோவில் தேரோட்டம்… பக்தர்கள் தரிசனம்…!!

இளம்பிள்ளையில் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகில் சந்தைப்பேட்டையில் காளியம்மன், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகின்றது. இவ்விழாவை ஒட்டி நேற்று அதிகாலை உருளு தண்டம் போடும் நிகழ்ச்சி மற்றும் படைவெட்டி அம்மன் கோவிலில் சக்தி அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு வந்தனர். இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் உற்சவ மாரியம்மன் தேரில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. அதன் பின்னர் மாரியம்மன் கோவிலில் இருந்து காடையாம்பட்டி பிரிவு சாலை வழியாக சேலம் மெயின் ரோட்டுக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து கொண்டு சென்றனர்.

அதன்பின் அங்கிருந்து சவுண்டம்மன் கோவில் வழியாக இளம்பிள்ளை நகரை சுற்றி கோவிலுக்கு தேர் வந்தது. இந்தத் தேர் வீதி உலா வரும்போது பக்தர்கள் தேங்காய் பழம், பூ, மிளகு ,உப்பு ஆகியவற்றை வைத்து பூஜை செய்து தங்கள் குடும்பத்துடன் தேரில் வலம் வந்து மாரியம்மனை வழிபட்டு வந்தனர். இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Categories

Tech |