Categories
மாநில செய்திகள்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்…. அமலுக்கு வரப்போகும் புதிய விதிகள்…..  மத்திய அரசு மாற்றம்….!!!

தொழில்நுட்ப படிப்புகளில், புதிய கல்வி கொள்கையின்படி மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதியில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. அதன்படி தமிழகத்திலும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகள் திருத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட உள்ளது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து வருகின்றனர். ஆனாலும் புதிய கல்விக் கொள்கையை நேரடியாக ஏற்காவிட்டாலும், அதன் அம்சங்கள் அமலுக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை படி இன்ஜினியரிங் டிப்ளமோ மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதியில் மத்திய அரசு சில மாற்றங்களை செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இந்த கொள்கையின் படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள கல்லூரிகளில் இன்ஜினியர் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் விதிகள் மாற்றப்பட உள்ளது. அதாவது பி.ஆர்க் படிப்பு, வேளாண் இன்ஜினியரிங், கணினி அறிவியல், தொழில்நுட்பம் பயோ டெக்னாலஜி போன்ற பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு அவர்கள் பிளஸ் 2 வகுப்பில் கணிதம் படிக்காத, அறிவியல் பாடப் பிரிவு மாணவர்களுக்கு சேரும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே அடுத்த கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் திருத்திய விதிகள் அமலுக்கு வரும் பொழுது பிளஸ்டூ அறிவியல் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களும் இன்ஜினியரிங் படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |