Categories
மாநில செய்திகள்

நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.30 உயர்வு…. பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை….!!!!

நூல் விலை கிலோவுக்கு மேலும் 30 உயர்ந்துள்ளதால் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த நிறுவனங்களுடன் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய பொருளாக இருப்பது நூல். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர் கிடைத்தவுடன் அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து நூல் விலையை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர்.

இதில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. கடந்த மாதம் நூல் விலையில் மாற்றம் இன்றி இருந்த நிலையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான நூல் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூரில் அனைத்துவகை நூல்களுக்கான விலையில் கிலோவுக்கு 30 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஒரு கிலோ ரூபாய் 365 லிருந்து ரூபாய் 435 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

Categories

Tech |