கரூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
கரூர் மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை 200க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி நடந்த இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் எஸ்பி பாண்டியராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.