Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி ரயில்வே ஸ்டேஷன்ல இதெல்லாம் வாங்கலாம்…!!!

ரயில் நிலையங்களில் கைவினை மற்றும் பட்டு விற்பனை தொடங்கி இருப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உள்ளூர் பொருட்கள் விற்பனை, உற்பத்தியாளர்கள் விவசாயிகள் வளர்ச்சி மற்றும் பணிகளின் தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு முக்கிய ரயில் நிலையங்களில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை தொடங்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அந்த வகையில் one station one product என்ற தலைப்பின் கீழ் நெசவாளர்களின் பட்டு, கைவினை கலைஞர்கள் பொம்மை மற்றும் சிலைகள் போன்றவற்றை ரயில் நிலையங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் ஒரு ரயில் நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டு விற்பனை தொடங்கப்பட்டிருக்கிறது. ரயில் நிலையத்தின் 2-வது நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டுப்புடவை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மார்ச் 25ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த கடையில் ஒரு புடவை வாங்கினால் இரண்டு புடவை இலவசம் என்ற சலுகையும்  வழங்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இந்த கடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பல்வேறு ரயில் நிலையங்களில்vocal for local,one station one product இன்று இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பதி மற்றும் விசாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் மர பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். மேலும் ரயில்வே துறையின் இந்த திட்டத்திற்கு சிறப்பு வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்கள் கைவினைக் கலைஞர்கள் தற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை நிரந்தரமாக அனைத்து ரயில் நிலையங்களும் அந்தந்த பகுதி சிறப்பு வாய்ந்த பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |