Categories
மாநில செய்திகள்

நெல்லை டூ சென்னை…. கூடுதல் சிறப்பு ரயில்கள்?…. வெளியாகுமா ஹேப்பி நியூஸ்…..!!!!

தமிழ் புத்தாண்டையொட்டி பயணிகளின் வசதிக்காக தாம்பரம் டூ நாகர்கோவில் இடையில் ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில் வரும் 13ஆம் தேதி தாம்பரத்திலிருந்தும் மறுமார்க்கமாக வருகிற 17-ம் தேதி நாகர்கோவிலில் இருந்தும் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு துவங்கி காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விட்டது. தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம் சென்னையிலிருந்து தென்காசி வழியே செல்லும் ரயில்களான பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் முறையே 225, 175, 125 என காத்திருப்போர் பட்டியலை கொண்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் நெல்லை வழியே செல்லும் ரயில்களான நெல்லை, செந்தூர், அனந்தபுரி, கன்னியாகுமரி போன்ற ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை 225,140, 218, 100 என்று இருக்கிறது .

தமிழ் புத்தாண்டு நிறைவடைந்து ஏப்ரல் 17-ஆம் தேதி நெல்லை மற்றும் தென்காசியில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுவிட்டது. இதனை கருத்தில் கொண்டு நெல்லையிலிருந்து அம்பை, கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் வழியே சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்பே தீபாவளி மற்றும் பொங்கலுக்கு இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ரயில்வேக்கும் நல்ல வருமானம் கிடைத்தது. ஆகவே தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட வரும் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு நெல்லையிலிருந்து தென்காசி வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |