Categories
உலகசெய்திகள்

இதை பார்த்து “உலக நாடுகள் அஞ்சும்”…. கெத்து காட்டிய வடகொரியா…. மூக்கை உடைத்த பிரபல நாடுகள்….!!

வட கொரியா அண்மையில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் பாணியில் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது தொடர்பாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அந்நாடு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக தென்கொரியாவும், அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளது.

வட கொரியா அண்மையில் ஹாலிவுட் திரைப்பட டிரைலர் பாணியில் ஏவுகணை சோதனை நிகழ்த்துவது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அதிபர் கிம் ஜாங் உன் ஒரு பெரிய கதவிலிருந்து மாசாக எண்ட்ரி கொடுக்க அவருக்கு இருபுறமும் ராணுவ உயரதிகாரிகள் நடந்து வருகிறார்கள். மேலும் வடகொரிய அரசு இந்த அணு ஆயுத சோதனை உலக நாடுகளுக்கு கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளை ஆய்வுசெய்த தென்கொரியா மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் வடகொரிய அரசு உலக நாடுகளை மேல் குறிப்பிட்டுள்ள ஏவுகணை சோதனை வீடியோ தொடர்பாக ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. அதன்படி அது 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஹ்வாசாங்15 என்ற ஏவுகணையை சோதனை செய்த வீடியோ என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |