Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: பேச்சுவார்த்தையை மீறிய ரஷ்யா…. குமுறும் “உக்ரேன் அதிகாரிகள்”….!!

ரஷ்யா பேச்சையை மீறி உக்ரைனிலுள்ள கீவ், செர்னிகிவ் நகரங்களில் விமானங்களின் மூலம் குண்டு மழை பொழிந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் பலம்வாய்ந்த ரஸ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

இதனையடுத்து இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் ரஷ்யா கீவ், செர்னிகிவ் ஆகிய நகரங்களிலிருந்து தங்களது படைகளை பின் வாங்கிக் கொள்வதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால் தற்போது ரஷ்யா பேச்சுவார்த்தையை மீறி கீவ், செர்னிகிவ் நகரங்களிலுள்ள வீடுகள், கடைகள், நூலகங்கள் போன்ற பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது விமானங்களின் மூலம் குண்டு மழை பொழிந்து வருவதாக உக்ரேன் அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.

Categories

Tech |