நாட்டின் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
நாட்டில் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனால் தொழிற்சாலை நடவடிக்கைகளும் முந்தைய உற்பத்தியை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் ஏற்றுமதி இறக்குமதி போன்றவை இயல்பான அளவை எட்டியது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூல் ஆன நிலையில், பிப்ரவரி மாதத்தில் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலானது.
இந்த நிலையில், மார்ச் மாத வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி வரி வசூலில் இது புதிய உச்சம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: ” மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ. 1, 42, 095 ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 25,830 ஆகும், எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 32,378 ஆகவும் ஐ.ஜி.எஸ்.டி ரூ.74,470- ஆகும். செஸ் வரி மூலம் ரூ.9,414 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட நடப்பு ஆண்டு 15 சதவீதம் கூடுதாலக கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.