சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு மூதாட்டியை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் கந்தாயி என்பது தெரியவந்துள்ளது. அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூதாட்டியை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.