சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கோரிமேடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதருக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரசாத் மற்றும் ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இரண்டு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பிரசாத் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.