லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி பாரதி நகரில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கருப்பசாமிக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜவுளி எடுப்பதற்காக கருப்பசாமி அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து ராமானுஜபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கருப்பசாமியின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருப்பசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.