Categories
மாநில செய்திகள்

“தப்பு செஞ்சா அவ்வளவுதான்”…. இளம் அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…. குவியும் பாராட்டு….!!!!

கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வரும் ராஜகோபால் சுன்கரா எந்த ஒரு களங்கமும் இல்லாமல் அவருடைய பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் எந்த ஒரு புகார் வந்தாலும் அதிரடியாகவும், விரைவாகவும் செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்வாராம். இந்த நிலையில் அண்மையில் மத்திய மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்த சுகாதார அலுவலர் ஒருவர் அலுவலக பணியாக இருந்தாலும் சரி, களப்பணியாக இருந்தாலும் சரி கமிஷன் வாங்கினால் தான் வேலை செய்வாராம்.

ஷாப்பிங் மால்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என எங்கு சென்றாலும் மாமூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அரசு அதிகாரியாக செயல்படும் ஒருவர் அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்ற விதி உள்ளது. இருப்பினும் இந்த அதிகாரி பாஜகவிற்கு ஆதரவாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்தன.

சக ஊழியர்கள் மத்தியில் இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிற்கு புகார்கள் சென்றது. இதையடுத்து ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை மாற்றம் செய்து மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி ஆணையரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |