Categories
அரசியல் மாநில செய்திகள்

சுற்றுப்பயணம் செல்லும் சசிகலா…. சேலம், திருச்சியில் அதிரடி பிளான்?…. என்ன தெரியுமா?….!!!!

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா திரைமறைவில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக சுமுகமாக காய் நகர்த்தி வருகிறார். ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவரது ஆதரவாளரை சந்தித்த சசிகலா, எடப்பாடி சுரேஷிடம் முக்கிய பொறுப்பை வழங்கியுள்ளார். அவ்வகையில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை அவர் கவனித்து வருகிறார்.

ஆன்மிக பயணமாக பல்வேறு கோவில்களுக்கு சசிகலா சென்று வந்தாலும் ஆதரவாளர்களை திரட்டி வரவேற்புக் கொடுத்து தனது செல்வாக்கை காட்டுவதுதான் திட்டமாக உள்ளது. சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் திருச்சி பகுதிகளுக்கும் சென்று வர அவர் திட்டமிட்டுள்ளார். அவ்வகையில் வருகின்ற 11ம் தேதி தியாகராயநகர் இல்லத்தில் இருந்து கிளம்பும் சசிகலா திருச்சி செல்கிறார். திருச்சியில் உத்தமர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு குணசீலம், முசிறி மற்றும் தொட்டியம் வழியாக நாமக்கல் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு 12 ஆம் தேதி சேலத்தில் இருந்து தாரமங்கலம், மேட்டூர் மற்றும் அம்மாபேட்டை வழியாக சத்தியமங்கலம் சென்று பண்ணாரி அம்மன் கோவிலில் வழிபடுகிறார். அதன்பிறகு கோவை வழியாக சென்னை திரும்புகிறார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்த நிலையில் அவரின் சொந்த மாவட்டத்திற்கு சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்வது அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |