மகரம் ராசி அன்பர்கள்…
பிறருக்கு உதவுவதால் மறைமுக சிரமம் கொஞ்சம் ஏற்படலாம். பணியில் சுறுசுறுப்பு அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் கூடுதல் மதிப்பெண்கள் பெற எண்ணுவார்கள், அதற்கான முயற்சியில் வெற்றியும் பெறுவார்கள்.
காரியத்தடை தாமதம் விலகிச்செல்லும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது மட்டும் நல்லது. எதிலும் கவனமாக இருங்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவார்கள். இன்றைய நாள் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள். எதிர்பாராத நன்மைகளும் கிடைக்கும், உடலில் வசீகரத் தன்மை கூடும், திருமண முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்