Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பெருசா?…. 11 நாட்கள் நடைபெறும் கண்காட்சி…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வைத்து வருகின்ற 15-ஆம் தேதி முதல் 25-ஆம்  தேதி வரை பபாசி அமைப்புகளுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் புத்தக  திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் மொத்தம் 110 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் 100 அரங்குகள் புத்தக கண்காட்சிக்காகவும், 10 அரங்குகள் அரசு துறை சார்பிலும்  அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவிழா காலை 10மணிக்கு தொடங்கி  மாலை 4 மணி வரை மாணவ-மாணவிகளிடையே பல்வேறு போட்டிகளும், வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க வாசிப்பு நிகழ்ச்சி என இரவு 10 மணி வரை  நடைபெறுகிறது. எனவே  நமது மாவட்டத்தை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |