சுவிட்சர்லாந்து அரசு, ஊழியர்கள் வெள்ளிக்கிழமை பணிக்கு வருவது இன்று தான் கடைசி என்று தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் அடுத்த வெள்ளிக் கிழமையிலிருந்து ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர தேவையில்லை. அதாவது ஒரு சில நாடுகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் ஓய்விற்கு பதில் மூன்று நாட்கள் விடுமுறை கொடுக்க தொடங்கியுள்ளன. எனினும், மீதமிருக்கும் வேலை நாட்களில் சிறப்பாக ஊழியர்கள் உற்பத்தியை வழங்குவதற்காகவும் வேலையில் திருப்தியாக ஈடுபடுவதாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.
இதே போன்று சுவிட்சர்லாந்தில் 4 நாட்களுக்கு பணி என்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களில் சோதனை செய்த பின்பு தான் அடுத்த வாரத்திலிருந்து இதனை நடைமுறைப்படுத்த உள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது.