Categories
தேசிய செய்திகள்

புதிய உச்சம்…. கடந்த மாதத்தை விட ஜி.எஸ்.டி ரூ.1.42 லட்சம் கோடி வரி வசூல்…. மத்திய நிதி அமைச்சகம்….!!!

நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் 14 % அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் ஏறத்தாள தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சாலைகளிலும் கொரோனாவுக்கு முந்தைய இருந்தது போல்  உற்பத்தியை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஏற்றுமதி, இறக்குமதியில் இயல்பான அளவை எட்டியுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றன.

இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் வரி வசூல் ரூ.1,40,986 கோடி, பிப்ரவரி மாதத்தில் ரூ.1.33 லட்சம் கோடியாக இருந்த நிலையில் மார்ச் மாதத்தில் ரூபாய் 1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி வரி வசூலில் இது புதிய அச்சமடைந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நிதி அமைச்சகம் கூறியதாவது. “மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூபாய் 1,42,095. இதில் சி. ஜி.எஸ்.டி ரூபாய்ரூ. 25,830, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 32,378, ஐ.ஜி.எஸ்.டி ரூ.74,470 ஆகும். மேலும் செஸ் வரி ரூ.9,414 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிடைத்த ஜி.எஸ்.டி தொகையை விட இந்த ஆண்டு 15 % கூடுதலாக கிடைத்துள்ளதாக” தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |