விருச்சிக ராசி அன்பர்களே….
இன்று சுய அந்தஸ்து காப்பதில் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். உற்பத்தி விற்பனை சீராக வளரும். ஓய்வு நேரத்தில் இசையை ரசிப்பதால் மனம் லேசாகும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் கவனமும் அனுசரணையும் இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் பொழுது கவனமாக அனுப்புங்கள். மாணவக் கண்மணிகள் கொஞ்சம் சிரமம் எடுத்து பாடங்களைப் படியுங்கள். விளையாட்டை தயவுசெய்து ஓரம் கட்டி விடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்