உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து 37வது நாளாக நடைபெற்று வருகின்ற நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பிரிப்யாட் நகர் அருகே செர்னொபெல் அணு உலையை வீரர்கள் கைப்பற்றினர்.
ஏற்கனவே இந்த அணு உலையில் 1986ம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் விபத்து காரணமாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அணு உலையில் கசிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகள் இந்த அணு உலையை கைப்பற்றியுள்ள நிலையில் துருக்கியில் ஏற்பட்ட பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ரஷ்ய படைகள் அணு உலையிலிருந்து பின்வாங்கினார். இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் அணு உலையில் இருந்து பின் வாங்கிய போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உக்ரைன் வீரர்களை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளனர்.