‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெஸ்ட் OTT யில் ரிலீஸாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
#Suriya's #EtharkkumThunidhavan digital arrives on April 7 – Netflix.
In – Tamil, Telugu, Kannada, Malayalam & Hindi#EtharkkumThunidhavanOnNetflix | #ET | #PriyankaMohan pic.twitter.com/a8gghzpSzm
— Ott Updates (@Ott_updates) March 31, 2022