Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைகளின் அரசியான ஊட்டியில் பசுமையான புல்வெளிகள் தேயிலைத் தோட்டங்கள் மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டங்கள் என இயற்கை அழகு ஜொலிக்கிறது. இந்தப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சினிமா படப்பிடிப்புகளும் அதிகமாக நடைபெறும். இதற்காக சென்னையில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

அதன்பிறகு கட்டணத்தின் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படும். கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக இந்த பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடைபெறவில்லை. தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டதால் இந்த பகுதிகளுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருவார்கள். எனவே சுற்றுலா பயணிகளின் வசதிக்காக படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை ஏப்ரல், ஜூன் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்.

Categories

Tech |