Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

இன்றைய ( 21.01.2020 ) நாள் எப்படி இருக்கு ? ராசி பலன் இதோ ….!!

இன்றைய  பஞ்சாங்கம்

21-01-2020, தை 07, செவ்வாய்க்கிழமை,

இராகு காலம் மதியம் 03.00-04.30,

எம கண்டம் காலை 09.00-10.30,

குளிகன் மதியம் 12.00-1.30,

சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00,  10.00-12.00.

இன்றைய ராசிப்பலன் –  21.01.2020


மேஷம் :

இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். செய்யும் செயல்களில்  தடைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடங்களில் வேலையில் நிதானத்துடன் இருங்கள். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ரிஷபம் :

இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் நட்பு  அதிகமாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியை குடுக்கும். உங்களின் பழைய கடன்கள் வசூலாகும்.

மிதுனம் :

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து வெற்றி காண்பிர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு  உங்களின் உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களால் நற்பலன் கிடைக்கும். இன்று உங்களின் வீட்டு தேவைகள் பூர்த்தியாகி , சேமிப்பு உயரும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

கடகம் :

இன்று உங்களின் குடும்பத்தில் இருப்பவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் உண்டாகலாம். நீஎங்கள் மேற்கொள்ளும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்களுடன் வேலையில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறைக்கப்படும்.

சிம்மம் :

இன்று உங்களின் பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் உள்ள பெண்கள் சிக்கனமாக செயல்படுவதால் பொருளாதாரம் சிறப்பாக நிலைத்து பொன்பொருள் சேரும்.

கன்னி :

இன்று உங்களுக்கு பணபுழக்கம்  அதிகரித்து வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.  எதிர்பாராத உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன்  செய்து முடிபிப்பீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறி வெற்றி காணப்பீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும் வாய்ப்பு உள்ளது.

துலாம் :

இன்று உங்களின் குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகள் தோன்றலாம். உடன் பிறந்தவர்களிடம் இருந்த ஒற்றுமை குறைய தொடங்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். உறவினர்கள் கை கொடுத்து உதவி புரிவார்கள். மதி நுட்பத்துடன் செயல்படும் பட்சத்தில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். இன்று உங்களுக்கு தெய்வ வழிபாடு நல்லது.

விருச்சிகம் :

இன்று உங்களின் பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிட்டும். . புதிய வாய்ப்புகள் தேடி வந்து பணகஷ்டம் நீங்கும். தெய்வீக காரியங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

தனுசு :

இன்று வியாபாரத்தில் உள்ள கூட்டாளிகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி  கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைத்து மகிழ்சியை உண்டாக்கும்.

மகரம் :

இன்று உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு  வேலையில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள் . உங்களின் நண்பர்கள் மூலம் உதவிகள் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்குவதோடு உங்களின் சுபகாரியம் கைகூடும்.

கும்பம் :

இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்களது குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைப்பதோடு உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

மீனம் :

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உண்டாகும். வீண் செலவுகளால் ஏற்படுவதால் சேமிப்பு குறையும். நெருங்கிய  நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். உடனிருப்பவரை அனுசரித்து கவனமுடன் சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைத்து மகிழ்ச்சி காணும் நாளாக அமையும்.

Categories

Tech |