ஜெர்மனியில் 7 பேருக்கு உணவில் விஷம் வைத்ததாக கூறி 32 வயதுடைய பல்கலைக்கழகத்தில் பயிலும் மனநலப் பிரச்சினைகள் கொண்ட மாணவி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.
ஜெர்மனியிலுள்ள Darmstadt தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் பயிலும் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் என மொத்தமாக சேர்த்து 7 பேர் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட நபர்களை பரிசோதனை செய்கையில் அவர்களது உணவிலும், பானங்களும் நச்சுத்தன்மை கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல் அதிகாரிகள் அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் 32 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளார்கள். இந்த சம்பவம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.