Categories
சினிமா

எனக்கு கல்யாணம்….! எனக்கு கல்யாணம்….! யாஷிகாவின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்….!!!

யாஷிகா ஆனந்த் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியிட்டுள்ள தகவலால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யாஷிகா. இவர் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவ.ர் இதை எடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு தற்போது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர்.

இந்நிலையில் அவருடைய திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் திருமணம் செய்து கொள்வதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அடைகிறேன். என் அப்பாவும் அம்மாவும் அதற்கு சம்மதித்துள்ளனர். இது செட்டில் ஆகும் நேரம் இருப்பினும் திரைப்படங்களில் இருந்து விலகப் போவதில்லை. எனக்கு சினிமா மிகவும் பிடிக்கும். எதுவாக இருந்தாலும் நான் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். லவ் எல்லாம் செட் ஆகாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தாலும், இது ஏப்ரல் 1ஆம் தேதி என்பதால் அவருடைய குறும்புத்தனமாக கூட இருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |