இந்தியாவில் மலிவான விலையில் டேப்லெட்டை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
சீன தேசத்து நிறுவனமான சியோமி எலக்ட்ரானிக் டிஜிட்டல் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் சியோமி நிறுவனம் விரைவில் இந்தியாவில் டேப்லெட் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான கவுன் டவுன் டைமரையும் சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருக்கும் டேப்லெட் மாடல் தொடர்பாக சியோமி நிறுவனம் தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து கடந்த வருடம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட MI Pad 5 டேப்லெட் சாதனத்தை சியோமி நிறுவனம் இந்தியாவில் லான்ச் செய்ய வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.
இதன் மூலமாக இந்தியாவில் முதல் முறையாக சியோமி நிறுவனம் தனது டேப்லெட் விற்பனையை தொடங்கயுள்ளது. இதனைத் தொடர்ந்து 11 இன்ச் எல்.சி.டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் MI Pad 5 டேப்லெட்டில் 8270mAh பேட்டரி, 33 வாட்ஸ் சார்ஜிங் வசதி மற்றும் ரியர் சைடில் இரண்டு கேமரா ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதேபோல் சியோமி நிறுவனம் வேறு ஒரு பிராண்டின் மூலமாக இந்தியாவில் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் மலிவு விலையிலான டேப்லெட் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கபடுகிறது.